இரத்த சோகையா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்

இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும்.

இரத்தச் சோகையின் மூன்று முக்கிய விளைவுகளாக இரத்த இழப்பு, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைதல், அதிக அளவில் இரத்த சிவப்பணுக்கள் அழிதல் என்பனவாகும்.

இரத்தச் சோகை இருந்தால் சோர்வாகவும், குளிர்வது போலும், தலைசுற்றுவது போலவும், எரிச்சலாகவும் உணரலாம். மூச்சடைப்பும், தலைவலியும் ஏற்படலாம்.

இதில் இருந்து எளிதில் விடுபட எளிய வீட்டு வைத்திய முறைகளை இங்கு பார்ப்போம்.

  • பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் 2 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.
  • உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து வாருங்கள்.
  • இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ்களில் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம்.
  • பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை மற்றும் காய்கறிகளில் கேரட், நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளதால் இவை அனைத்தையும் கொண்டு சாலட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
  • தேனில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
  • இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச்சத்து உறிஞ்ச உதவும்.
  • தினமும் மூச்சுப்பயிற்சி மற்றும் லேசான உடற்பயிற்சிகளான வாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வருவதன் மூலம், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
  • இரத்த சோகை இருப்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.