இந்த 8 உணவில் ஒன்றையாவது சாப்பிடுங்க…. குடல் பகுதி முழுக்க சுத்தம் செய்யுமாம்!

குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது அல்லது நமதின் வயிற்றில் உள்ளது என்றும் கூறலாம்.

நாம் வாழ்வதற்கு அடிப்படை தேவையே உணவு தான். இவற்றை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும் தன்மை இதற்குண்டு.

இத்தகைய உறுப்பு பாதிப்படைந்து விட்டால் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான செயல் ஒன்றாகும்.

குடல் பகுதியே பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இதற்காக மருந்துகள் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. இயற்கை உணவுகள் மூலமாக கூட குணப்படுத்த முடியும்.

தற்போது குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் சீரகத்தை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பகுதியில் எந்தவித நோய் தாக்குதல்களும் ஏற்படாது. அத்துடன் வயிற்றில் ஏற்பட கூடிய பிரச்சினைகளையும் இது தடுத்து விடும் தன்மை கொண்டது. மேலும் வயிற்று புண் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
  • தினமும் மோர் குடித்து வந்தால் நீர்சத்து அதிகரிப்பதோடு குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.
  • பூண்டு வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் இது பயன்படுகிறது. மேலும், செரிமானம் விரைவாக நடைபெற பூண்டு தான் சிறந்த உணவு.
  • பப்பாளியில் உள்ள பாப்பைன் என்கிற மூல பொருள் செரிமானத்தை தூண்டும் நொதியை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் ஜீரண கோளாறு இல்லாமல் உணவு விரைவிலே செரிமானம் அடையும்.
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும். அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். இந்த சாற்றை வாரத்திற்கு 3 முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.
  • இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக வயிற்றில் உண்டாக கூடிய புண்களை தடுக்க முடியும். அத்துடன் பசியை தூண்டிய குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்
  • புதினாவின் மென்தால் என்கிற மூலப்பொருள் உள்ளதால் வயிற்று உப்பசம், குடல் புண், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக அமையும். குடல் வழியை சுத்தம் செய்யவும் இந்த உணவு பொருள் உதவும்.
  • சியா விதைகள் குடல் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும், காலையில் ஏற்பட கூடிய மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த விதைகள் சிறந்த தீர்வாக இருக்கும். நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் மிக சுலபமாக செரிமானத்தை ஊக்குவிக்கும்.