வெந்தயத்தில் இவ்வளவு பக்க விளைவா? பெண்களே உஷார்

உடலில் பல பிரச்சனைகளுகு தீர்வு தருவது வெந்தயம்.

இதுவே இன்று அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப நாம் உணவில் சேர்த்து கொள்ளும் வெந்தயத்தை அதிக அளவு உண்டால் பலவிதமான தீமைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வெந்தயம் சர்க்கரை நோய் முதல் அதிக கொழுப்பு வரை அனைத்திற்கும் இயற்கை தீர்வாக செயல்படும் ஆற்றல் கொண்டிருந்தாலும் அதை அதிக அளவு உண்டால் உடலின் செயல்பாட்டிற்கு பெரிதும் இடையூறை ஏற்படுத்தும்.

 

வெந்தயத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
  • பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை எடுத்து கொள்வதினால் அவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை வாந்தி மற்றும் குமட்டல். எனவே வெந்தயத்தை தினமும் 2 முதல் 5 கிராம் வரை இரு முறை எடுத்துக் வெந்தயத்தை எடுத்து கொள்ளலாம்.
  • பெண்களுக்கு அதிக அளவில் வயிற்று உபாதைகள் வருவதற்கு காரணம் வெந்தயம் சாப்பிடுவதே. மேலும் வெந்தயத்தை 100 கிராமை விட அதிகமாக ஒரே நேரத்தில் எடுத்து கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே முடிந்தவரை வெந்தயத்தை அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.
  • ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவுகோளாறுகள் இருக்கும் பெண்கள் இதனை சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். ஏனெனில் வெந்தயம் இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.
  • உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெந்தயம் குறைத்து விடும். மேலும் சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களாக இருந்தால் வெந்தயம் உட்கொள்ளும்முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயமும் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும்.
  • பெண்களின் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சப்போனின் என்னும் வேதிப்பொருள் வெந்தயத்தில் அதிக அளவு காணப்படுவதால் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது.
  • பெண்கள் வெந்தயத்தால் செய்யப்பட்ட உணவுகளையோ சாப்பிட்டவுடன் உடலில் இருந்து ஒருவித நாற்றம் வெளிப்படும். என்வே அதிக அளவு வெந்தாயம் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.
  • பட்டாணி, கடலை, சோயா போன்றவை அலர்ஜிகளை ஏற்படுத்துமாயின் நீங்கள் வெந்தயம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.