பெருஞ்சீரகத்தை இந்த பொருளோடு சேர்த்து முகத்துல தடவுங்க முகப்பருவே வராதாம்!

தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு என்றழைக்கப்படுகின்றது.

நம்மில் சிலர் முகப்பரு வந்தாலே நகங்களை வைத்து கிள்ளிவிடுவது வழக்கமாகவே மாறிவிட்டது.

முகப்பரு நாம் அளவுக்கு அதிகமாக எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதனாலும் கண்ட கண்ட கிறீம்களை உபயோகிப்பதனாலும் உருவாகி விடுகின்றது.

அந்தவகையில் ஆயிரம் வருடமாக இந்த பெருஞ்சீரகத்தை நாம் நமது உணவிலும் மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றோம். இது முகப்பருவிற்கு சிறந்த தீர்வாக அமைகின்றது. தற்போது பெருஞ்சீரகத்தை வைத்து முகப்பருவை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • தேன் 1 ஸ்பூன்
  • ஓட்ஸ் 1 ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
செய்முறை

ஓட்ஸ் மற்றும் தேனை முதலில் அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.