தினமும் காபி குடிப்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் பற்றி தெரியுமா?

காபி அருந்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

காபியில் ப்ளாக் காபி, ஐஸ் காபி என பல விதங்கள் உள்ளன. உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும் காபிக்கு பலர் அடிமைகளாக உள்ளனர். சர்க்கரை சேர்க்கப்பட்ட காபியை பருகுவதை முடிந்த அளவு தவிர்த்து, வேறு ஏதாவது இனிப்பு பொருளை சேர்த்து காபி பருகும்போது பல நன்மைகள் கிடைக்கும்.

இந்நிலையில் தினமும் காபி அருந்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை காண்போம்.

ஞாபக சக்தி

காபியில் உள்ள காபின், க்ளுக்கோஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

அல்சைமர் நோய்

தினமும் ஒரு முறை ஒரு கப் காபி பருகுவதால், அல்சைமர் எனும் நோயின் அபாயம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு கப் அளவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு

காபி பருகவதால் மனச்சோர்வு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் காபியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பது தான்.

கல்லீரல் பாதிப்பு

ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி பருகுவதன் மூலம், கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவது குறைக்கப்படுகிறது. அதுவே 3 கப் காபி பருகுவதால் இதய நோயின் பாதிப்பு அபாயம் குறைக்கப்படுகிறது.

புற்றுநோய்

தினமும் 4 கப் காபி பருகுவதால் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதையும் தடுப்பதாக கூறப்படுகிறது.

நீரிழிவு நோய்

பார்கின்சன் நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்தை தடுக்க, தினமும் 7 கப் காபி பருகலாம் என்று கூறப்படுகிறது.