தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

இன்றைய காலக்கட்டத்தில் நூற்றில் ஐம்பது சதவீதம் பலருக்கும் தைராய்டு நோய்த் தாப்பதற்கான அறிகுறி இருப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் தைராய்டு தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.

அத்தகைய தைராய்டு பிரச்சனையை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை என்று பார்ப்போம்.

பூண்டு

செலினியம் அதிகம் உள்ள பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் தைராய்டு மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் இதயநோய் போன்றவை குணமாகும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை மற்றும் பச்சை இலை காய்கறியில் விட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சாப்பிட்டால் தைராய்டு பிரச்சனைக்கு நல்லது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் அதிக அயோடின் உள்ளது, எனவே இவற்றை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து விரைவில் குணமாகலாம்.

காளான்

தைராய்டு ஏற்பட செலினியம் குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

முட்டை

முட்டை மற்றும் பால் பொருட்களில் அயோடின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இந்த உணவுகள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்.

தானியங்கள்

தானிய வகைகளான ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால் தைராய்டு சுரப்பி சீராகும்.

தக்காளி

தக்காளியில் விட்டமின் C அதிகம் உள்ளது. எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை தங்களின் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நம் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இவை தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது.

கொள்ளு

நமது அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.

கடல் பாசி

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.