சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

சர்க்கரை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பெரும் பங்கு வகிக்கின்றது. இன்றைய நவீன உலகில் சர்க்கரை இல்லாத உணவுகள் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இந்த சர்க்கரை அளவுக்கு மீஞ்சினால் கூட உயிரையே பரித்து விடும் வல்லமை படைத்தது.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் நடக்க கூடிய மாற்றங்கள் அனைத்துமே நேரடியான தாக்கத்தை தரவல்லது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறையும் மேலும், தொப்பையால் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு நல்ல தீர்வை தரும்.
 • இளமை குறையாமல் இருக்க சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். இவை தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்ளும்.
 • சீக்கிரமே வயதாகாமல் மிக இளமையாக இருப்பீர்கள். அத்துடன் முக சுருக்கங்களும் வராது.
 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் மிக குறைவு. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.
 • சர்க்கரை சாப்பிட கூடிய பல ஆண்களுக்கு கலவியில் ஆர்வம் சீக்கிரமாகவே குறைந்து விடும். மேலும், இது ஆண்களின் உடலில் சில சீரற்ற மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
 • பெண்களின் செக்ஸ் ஹார்மோன், சர்க்கரை எடுத்து கொள்வதால் குறையவும் கூடும்.
 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்க கூடும். மேலும், நல்ல மனநிலையும் ஏற்படும்.
 • வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் , பற்களில் துர்நாற்றம் வீசாமல் இனிமையான சுவாசம் கிடைக்கும்.
 • சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தினால் முகத்தில் ஏற்பட கூடிய பருக்களை இந்த சர்க்கரை இல்லாத பழக்கம் குறைத்து விடும். மேலும், சரும வறட்சியையும் இது தடுக்கும்.
 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் சர்க்கரை நோயினால் வர கூடிய அபாயம் மிக குறைவு. மேலும், இது இன்சுலினையும் நன்கு சுரக்க வைக்கும்.
 • சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் எளிதில் ஆழ்ந்த தூக்கம் வரும்.
 • இரவில் நல்ல தூக்கம் வருவதால் ஹார்மோன்களும் சம அளவில் சுரந்து உடல்நல குறைபாட்டை தவிர்த்து விடும்.