நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான்.

# சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது.

# இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒருநாளைக்கு 10-15 கிராம் நெய் உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

# உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

# கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது.

# நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

# வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.