நகங்களை வசீகரமாக்கும் பூண்டு மற்றும் எலுமிச்சையின் மாயங்கள்!

நகங்கள் பெண்களின் அழகுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நகங்கள் முக்கியமானவைதான். நகங்களை சுத்தமாக வைத்து கொள்வது மற்றும் உடையாமல் பார்த்து கொள்வதன் மூலம் மற்றவரை ஈர்க்க முடியும்.

நகங்கள் பலவீனமாக இருப்பதற்கு ஊட்ட சத்து குறைபாடுகள் அதிலும் கால்சியம் குறைபாடுகள் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்திருக்கிறது.

பூண்டு மற்றும் எலுமிச்சையில் உள்ள மினெரல்ஸ் சத்துக்கள் இது உங்கள் நகங்களை பலப்படுத்தி உடையாமல் காக்க உதவுகிறது. இதற்கு சந்தையில் பல்வேறு கெமிக்கல்கள் அடங்கிய பூச்சுக்கள் வந்து விட்டன என்றாலும் இயற்கை முறையில் நகங்களை பலப்படுத்துவது நன்மை தரும்.

பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை இயற்கை மருந்து நகம் வளரும் சமயம் உடைந்து போனால் , நகத்தின் நிலையை மேம்படுத்தும். அவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன்மூலம் நகத்தை வலுப்படுத்த உதவுகிறது.

இந்த இயற்கை பூச்சில் உள்ள சல்பர் காம்பௌண்ட் நகங்களை எல்லாவித பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றுகிறது. அதுமட்டுமின்றி நகங்கள் பொலிவடையவும் உதவுகின்றது. மேலும் பங்கஸ் போன்ற தோற்று நோய்களில் இருந்தும் காப்பதோடு கொலாஜென் அளவையும் பராமரிக்கிறது.

வீட்டிலேயே நமது நகங்களை பார்லரை விட அழகாக நம்மால் பராமரிக்க முடியும். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நகங்களை அழகுபடுத்துவதன் மூலம் ரசாயனங்களின் தீமைகளில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.

தேவையானவை

பூண்டு பல் 2

எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி

வைட்டமின் ஈ கேப்ஸுல்

க்ளியர் நெயில் பாலிஷ் ஒரு பாட்டில்

செய்முறை

பூண்டு பல்லை நன்றாக நசுக்கி அதில் எலுமிச்சை சாறு மற்றும் வைட்டமின் ஈ கேப்சுலை கலந்து வைத்து கொள்ளவும்.

அதன் பின் கிளியர் நெய்ல்பாலிஷில் இந்த கலவையை கலந்து வைத்து கொள்ளவும்.

இந்த கலவையை நகங்களின் மீது போடுமுன் நெய்ல் பாலிஷ் போன்றவற்றை நீக்கி கைகளை சுத்தம் செய்து விட்டு இந்தக் கலவையை பயன்படுத்த வேண்டும்.

நகங்கள் முழுமைக்கும் இந்த பூச்சு சென்று சேரும்படி போட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து இந்தக் கலவையை கழுவி வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நகங்கள் வலிமையாகும். பொலிவாகவும் இருக்கும்.

மென்மையான மற்றும் வலுவான நகங்கள் பெறுவதற்கு இந்த பழக்கத்தை பின்பற்றவும். மேலும் நகங்கள் கடிப்பது, நகங்களை ஆயுதமாக்கி பொருட்களை திறப்பது போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அடிக்கடி நகப்பூச்சுகளை நீக்கி சற்று நேரம் வெறும் நகங்களாக விட்டு வந்தால் மேலும் ஆரோக்கியம் கூடும்.