முகத்தில் சுருக்கம்.. மூட்டு வலி: எதன் அறிகுறிகள்?

சிவப்பு நிறத்தினை கொண்ட ரத்தம் நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறது.

அதோடு மட்டுமில்லாமல் ரத்தமானது அனைத்து செல்களிலும் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இத்தகைய வேலையை செய்யும் ரத்தம் நம் உடம்பில் சுத்தமாக இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

ரத்தம் சுத்தமின்மையால் ஏற்படும் நோய்கள்?

ரத்தம் சுத்தமாக இல்லையெனில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துப் பொருட்கள், நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படாது.

இதனால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற பல நோய்களை சந்திக்க நேரிடும்.

ரத்தம் சுத்தமாக என்ன செய்யலாம்?
  • தண்டுக் கீரையுடன் சிறிதளவு மிளகு, மஞ்சள், தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் ரத்தமும் சுத்தமாகும்.
  • நெல்லிக்காயை நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். அதுவே வெறும் நெல்லிக்காயை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
  • புதினா இலை மற்றும் வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஒரே மாதத்தில் சுத்தமாகும்.
  • காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து தினமும் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
  • முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
  • குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் ரத்தம் பெருகும். அதுமட்டுமின்றி, குங்குமப்பூவுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.