முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ எளிய தீர்வு

சிலருக்கு முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய் பசை காரணமாகவே முகப்பொலிவை இழந்து கருமையாக காணப்படுகின்றனர்

மேலும் கருமையைப் போக்க கீழே உள்ள சில இயற்கை வழிகளை பின்பற்றினால் அவர்களும் வெள்ளையாகவும் ஜொலிக்கலாம்.

பாதாம் மற்றும் மஞ்சள்

இரவில் படுக்கும் முன் 5-6 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, பின் அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைத்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் தயிர்

தயிருடன் மஞ்சள் தூள் கலந்து, முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து, பிறகு கழுவ, கருமைகள் நீங்கி, சருமம் வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.

தயிர், மஞ்சள் மற்றும் பால்

தயிர் மற்றும் பாலை ஒன்றாக நன்கு கலந்து, அத்துடன் மஞ்சள் தூள் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை, மஞ்சள் மற்றும் தயிர்

2 ஸ்பூன் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதிகளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்

மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீமை சரிசம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்

2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வேண்டுமானால் அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு

மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி

2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 3 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.