முடி வெடிப்பை விரைவில் தடுக்கும் சில எளிமையான வழிகள்

சிலருக்கு முடியின் நுனியைப் பார்த்தால் இரண்டாக பிளந்திருக்கும், அப்படி முடியானது இரண்டாக பிளந்திருந்தால் மீண்டும் வளராது.

இப்படி முடி பிளப்பதற்கு அதிகப்படியான அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவது ஒரு முக்கிய காரணம்.இத்தகைய முடி வெடிப்பைத் தடுக்கும் சில எளிமையான வழிகள் என்னவென்று பார்ப்போம்.

முடி வெடிப்பிற்கு காரணம்
 • சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும்.
 • அடிக்கடி கெமிக்கல்ஸ் நிறைந்த ஷாம்பூ பயன்படுத்தினால், தலைமுடி அதன் ஈரப்பசையை இழக்கும். இதனால் தலைமுடி தானாகவே உடைபடும்; பல கிளைகளாக விரியும்.
 • வெந்நீரில் குளிப்பது, வெந்நீரால் தலையை சுத்தம்செய்வது தவறு. அதன் வெப்பம் தலைக்குள் புகுந்து, முடி முழுவதையும் வெடிப்படையச் செய்யும்.
 • நீண்ட நாள்களுக்கு எண்ணெய் தடவாமல் இருப்பதும் முடியில் வெடிப்பை ஏற்படுத்தும். குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
 • தலைமுடி ஆரோக்கியத்துக்கு தேவையான அளவு தாதுக்களும் வைட்டமின்களும் அவசியம். மேலும் இரும்புச்சத்து இல்லாமல் போனால், முடி வலுவிழந்து பாதிப்புக்கு உள்ளாகும்.
தடுப்பதற்கான வழிமுறைகள்
 • தினமும் தலைக்கு குளிக்காமல், வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
 • எப்போதும் தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். ஏனெனில் இவை முடியை மென்மையாக வைக்க உதவுவதோடு, முடி வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.
 • தலைக்கு குளித்த பின், ஹேர் ட்ரையர் பயன்படுத்தி முடியை உலர வைக்காமல், இயற்கையாக உலர வைத்து பழகுங்கள்.
 • ஹேர் ஸ்ட்ரைட்னிங் மற்றும் கர்லிங் செய்யும் போது முடி தனது வலிமையை இழந்துவிடுவதோடு, முடி வெடிப்பும் ஏற்படும் எனவே இவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
 • முடி ஈரமாக இருக்கும் போது சீவுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் முடி உதிர்வது அதிகரிப்பதோடு, முடி வெடிப்பும் அதிகரிக்கும். எப்போதுமே முடி நன்கு உலர்ந்த பின் தான் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
 • இரண்டு மாதத்திற்கு ஒருமுறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் முடி வெடிப்பினால் முடியின் வளர்ச்சி தடுக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
 • கலரிங்கில் அம்மோனியா மற்றும் பெராக்ஸைடு போன்ற கெமிக்கல்கள் இருப்பதால், அவை முடியின் புரோட்டினை பாதித்து, முடி வெடிப்பு, வறட்சி போன்றவை ஏற்படக்கூடும். ஆகவே இதனை தவிர்க்கவும்.
 • வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளித்து வர வேண்டும். இதன் மூலம் முடியின் மென்மை அதிகரிப்பதோடு, மயிர்கால்களும் வலிமையோடு இருக்கும்.