மூட்டு வலியை மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி? இதோ எளிய டிப்ஸ்

40 வயது தாண்டினாலே நம்மில் சிலருக்கு நடக்க முடியாமல் மூட்டு வலி ஆரம்பித்து விடுகின்றது.

அடிபட்டதன் காரணமாகவோ, தசைநார்கள் அல்லது குறுத்தெலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலோ மூட்டு வலி வரலாம்.

இல்லாவிடின் கீல்வாதம் மற்றும் தொற்றுக்களின் காரணமாகவும் மூட்டு வலி வரலாம். மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும்.

அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களை பற்றி பார்ப்போம்

  • ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.
  • கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.
  • ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரைசேர்த்து, அந்நீரில் வீக்கமுள்ள மற்றும் வலியுள்ள மூட்டுக்களை 10 நிமிடம் ஊற வையுங்கள். இறுதியில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரு வேளை மசாஜ் செய்யுங்கள்.
  • ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றா மணக்கு இலையை விளக் கெண்ணை விட்டு வதக்கி கட்டு போடலாம்.
  • பிரண்டை யின் வேர் பொடி, முடக்கத் தான் இலை பொடி, தழுதாழை இலை பொடி, இவற்றை சம அளவு கலந்து அரை ஸ்பூன் மிளகு தூளு-டன் பாலில் சேர்த்து அருந்தலாம்.
  • எலுமிச்சை பழச்சாறு விட்டு சுக்கை அரைத்து பத்து போடலாம்.
  • குப்பை மேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்து சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பத்து போடலாம்.
  • சிற்றா முட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து காய்ச்சி அதை ஒரு டம்ளராக வற்றவைத்து அதனை 30 மில்லி அளவுக்கு அருந்த வேண்டும்.
  • குங்கிலியத்தை பொடித்து அமுக்கரா கிழங்கு பொடி சேர்த்து பாலில் கலந்து பருகலாம்.
  • ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்