உங்க மூக்குமேல கண்ணாடி போடற தழும்பு அசிங்கமா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க

பொதுவாக சில பெண்களுக்கு கண்ணாடி அணிவதனால் மூக்கிடையே கருமையாக தழும்புகள் போன்று காணப்படும்.இது பார்ப்பதற்கே அசிங்கமாக காணப்படும்.

அதனை போக்க கண்ட கண்ட கிறீம்களை போட வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.அந்தவகையில் அந்த தழும்பை போக்கும் அற்புத பேக் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு
  • ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
  • 2 ஸ்பூன் தக்காளி சாறு
செய்முறை

வெள்ளரிக்காய் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றில் உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி சாற்றை சேர்க்கவும். எல்லா சாற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.

இந்த சாற்றில் ஒரு காட்டன் பஞ்சை முக்கி எடுக்கவும். அந்த பஞ்சை எடுத்து மூக்கில் உள்ள தழும்பில் தடவவும்.

இந்த சாறு முகத்தில் காயும் வரை அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இந்த முறையை பின்பற்றலாம். நிச்சயமாக தழும்பு மறைவதில் ஒரு நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.