கண் புருவத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ!

முகத்தின் அழகுக்கு மெருகூட்டுவதே கண் புருவங்கள் என்பதால், அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் வளர சில இயற்கை வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்.

புருவங்களை அழகாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய, இயற்கையான வழிமுறைகள் குறித்து காண்போம்.

விளக்கெண்ணையை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறாக ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், புருவங்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.

விளக்கெண்ணையில் உள்ள லாரிக் அமிலம், புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர்ச்சிக்கு வித்திடும். மேலும், இது புரோட்டீன் இழப்பையும் தடுக்கும்.

ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ‘E’, முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ‘A’ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்யை அதிகரிக்கும். எனவே, இந்த எண்ணெய்யை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதன்மூலம், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தூங்குவதற்கு முன்னர் இந்த எண்ணெய்யை தேய்த்துவிட்டு காலையில் கழுவ, எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின்கள் A, B, E முடி வளர உதவும்.

கற்றாழை ஜெல்லை தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து கழுவி வர முடி வளர்ச்சி சீரான நிலையில் இருக்கும்.

வெங்காயச் சாற்றினை, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் மூன்று தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து தேய்த்து வந்தால் நன்கு முடி வளரும். மேலும், இதனை மூன்று முறை செய்து வந்தால், இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.

பாலை பஞ்சால் தொட்டு தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து செய்து வர புருவ முடி சீராக வளரும்.

செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்து வந்தால் புருவ முடியின் வளர்ச்சி அதிகளவில் இருக்கும்.