இரண்டு வாரத்தில் 10 கிலோ எடையை குறைக்கும் அற்புத பானம்!

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை ஆரோக்கியமான முறையில் எளிமையாக வீட்டிலேயே குறைக்க உதவும் அற்புதமான பானம் எப்படி தயாரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
 • மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
 • தேன் – 4 ஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
செய்முறை
 • ஒரு லிட்டரில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடி 4 ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • தண்ணீர் தாகம் எடுக்கும்போதெல்லாம் நாள் முழுக்க எப்போதும் இதை குடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் தண்ணீரும் குடிக்கலாம்.
 • மேலும் இந்த பானம் உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுவதோடு மட்டுமில்லாமல் உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பையும் இயற்கையான முறையில் எரித்து விடுகிறது.
நன்மைகள்
 • மிளகாய்ப் பொடி உடலில் மெட்டபாலிசத்தைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. அதனால் இயல்பாகவே நம்முடைய கொழுப்பு தேங்காமல் கரையத் தொடங்குகிறது.
 • தேன் உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக் கொள்கிறது. எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் அது உடலுக்குள் தேங்குகின்ற கொழுப்பினை வெளியேற்றுகிறது.
 • இந்த பானமானது நம்முடைய உடலில் நச்சுக்கள் மற்றும் அழுக்குகளைச் சேர விடாமல் வெளியேற்றும்.
 • உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.
 • உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சக்தியைக் கொடுக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது.
 • உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது.சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்துகிறது. சுவாசப் பிரச்னைகளை சரிசெய்கிறது
குறிப்பு
 • இந்த பானத்தை இரண்டு வாரங்கள் குடித்து வந்தாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த பானத்தைத் தொடர்ந்து குடிக்க வேண்டாம்.