10 நாட்களில் சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா? இந்த மாஸ்க் மட்டும் போதும்

இன்றைய காலத்தில் சீக்கரமாக வெள்ளையாகுவதற்கு எத்தனையே க்ரீம்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் இது நமக்கும் நிரந்த அழகினை எப்போழுதுமே தருவதில்லை.

இரசாயனம் கலந்த க்ரீம்கள் அல்லது லோசன்களைப் பயன்படுத்தினால், அது சரும செல்களின் ஆரோக்கியத்தை அழிக்கும் என்று கூறப்படுகின்றது.

சிறந்த முறையில் சீக்கிரமாக வெள்ளையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க்கை பயன்படுத்தினாலே போதும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும்.

தற்போது இந்த அற்புத மாஸ்க்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை – 1
  • சர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
செய்முறை

ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் சர்க்கரை பவுடர், கற்றாழை ஜெல், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு பிரஷ் பயன்படுத்தி முகத்தில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், உடனே வெயிலில் செல்லக்கூடாது. ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் வந்தால், சன் ஸ்க்ரீன் எதையேனும் பயன்படுத்தி பின் செல்லுங்கள்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் 10 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு

சரும நிறம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்று அடிக்கடி இதைப் போட வேண்டாம்.

இதில் பேக்கிங் சோடா இருப்பதால், தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் மோசமாக பாதிக்கப்படும்.