புற ஊதாக்கதிர்களால் உண்டாகும் கருமையை போக்க வேண்டுமா? இந்த மாஸ்க் ட்ரை பண்ணுங்க!

பொதுவாக அனைவருக்கும் வெயிலில் சென்று வந்தாலே முகம் மற்றும் சருமம் போன்று கருமையடைந்து காணப்படும்.

புற ஊதாக்கதிர்களால் உண்டாகும் கருமையை நமது சரும பொலிவையே இல்லாமல் செய்து விடுகின்றது.

இதற்கு நாம் பியூட்டி பாலர்களுக்கு செல்ல தேவையில்லை சரும நிறத்தை அதிகரிக்கச் செய்து பொலிவை கூட்டுவதில் பலவகை இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பேரிச்சம் பழம்.

தற்போது இதனை வைத்து எப்படி சருமத்தை பொழிவுபெறலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை
  • பேரிச்சம் பழம் கொட்டையற்றது – 2
  • உலர் திராட்சை – 10
  • பப்பாளி – 2 ஸ்பூன்
செய்முறை

முதலில் பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அவற்றை பசை போல் அரைத்து அதனுடன் பப்பாளியை 2 ஸ்பூன் அளவு மசித்து போடுங்கள்.

இந்த கலவையை நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

இவ்வாறு செய்தால் வெயிலினால் கறுத்த உங்கள் முகம் நிறம் மாறி பளபளக்கும். பேரிச்சம் பழம் ரத்த சோகையை குணப்படுத்தும். அதனை அழகிற்காக பயன்படுத்தும்போது புற ஊதாக்கதிர்களால் உண்டாகும் கருமையை மறையச் செய்துவிடும்.