சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க

ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவுப் பொருள். ஒரு சிறிய கப் ஓட்ஸில் 13 கிராம் புரோட்டீன் உள்ளது.

ஒரு நாளைக்குத் தேவையான அளவு மாங்கனீசு ஓட்ஸில் இருந்து, 100 சதவீதம் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ஓட்ஸில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஈ, செலினியம், பீனோலிக் அமிலங்கள், பைட்டிக் அமிலம் போன்றவை உள்ளது.

மற்ற ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, காப்பர், பயோடின், மக்னீசியம், மாலிப்தீனம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன.

ஓட்ஸில் நிறைந்திருக்கும் பீட்டா குலுக்கன் எனப்படும் அதே வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. இதனால் எளிதில் சக்கரை நோயிலிருந்து விடுபடலாம். .

தற்போது ஓட்ஸை பயன்படுத்தி சக்கரை நோயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஓட்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 500 மிலி
  • பட்டை தூள் – 2 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை

முதலில் நீரை சூடேற்றி அதில் ஓட்ஸைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, அத்துடன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

அதுவும் இதை தினமும் காலையில் என தொடர்ந்து 15 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், இந்த ஓட்ஸை சாப்பிட்டால், உயர் நிலையில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும்.

அதுவே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதோடு, உடல் எடையும் ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படும்.

குறிப்பு

சர்க்கரை நோயைக் குறைக்க வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், பட்டையைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு, பின் பயன்படுத்துங்கள்.

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், பட்டைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் அளவுக்கு அதிகமாக பட்டையை உட்கொண்டால், அது கல்லீரல் பிரச்சனையை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.